Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரை வங்கிகள் வாயிலில், நடுரோட்டில், உச்சி வெயிலில் காத்திருக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)

கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆகையால் மக்கள் வங்கிகளுக்கு சென்றே புதிய நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று அதிரையில் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களை காட்டிலும் இன்று கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அனைத்து வங்கிகளின் வாயில்களிலும் பொதுமக்கள் கூட்டம் பன்மடங்காக காணப்பட்டது.

img_7376 img_7377 img_7378 img_7379 img_7380 img_7381

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy