Adirai pirai
இந்தியா

புதிய 2000 ரூபாய் வெளியான 3வது நாளிலேயே கள்ளநோட்டு?

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வந்த 3வது நாளில் கள்ளநோட்டு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்ததோடு, புதிய 500, 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனை பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் பணத்தை மாற்ற போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகியுள்ள 3வது நாளில் கர்நாடகா மாநிலம், சிக்மகளூரில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாவும், இந்த பணத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.