நபிகள் நாயகத்தின் மார்க்கத்திற்கு, அல்லாஹ் ஓதுவித்த வாசகங்களை மாற்றிச் சொல்ல நீ யார்? குஷ்புவை தாக்கிப் பேசிய பழ.கருப்பையா..!

மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டையில் ஷெரியத் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட, திமுக பிரமுகர் பழ. கருப்பையா பேசும்போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு இஸ்லாமிய மதத்தில் இருந்து வெளியேறி மாற்று மதத்தினரை மணந்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி, இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், குஷ்பு இச்சட்டத்துக்கு எதிராக பேசிவது தவறு என பழ. கருப்பையா கூறினார்.

Close