ஹிஜாப் அணிந்திருக்கும் பெண் ஐகானை எமோஜி பட்டியலில் சேர்க்க முடிவு

ஸ்மார்ட் போன்களில் தாய்ப்பால் ஊட்டல் (breastfeeding), ஹிஜாப், யோகா உள்ளிட்ட புதிய எமோஜிக்கள் அறிமுகமாக உள்ளன.

அடுத்த வருடம் சர்வதேச கூட்டமைப்பான யுனிகோட் நிறுவனம் 51 புதிய ஸ்மார்ட்போன் எமோஜிக்களை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. தலையில் ஸ்கார்ஃப் அணிந்த நபர், தாடி வைத்துள்ள நபர், வயதான தம்பதிகள் என புதிய ஐகான்கள் சேர்க்கப்பட உள்ளன. ஜெர்மனியை சேர்ந்த 15 வயது சிறுமி அல்ஹுமெதி, ஹிஜாப் அணிந்திருக்கும் பெண் ஐகானை எமோஜி பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்ததை அடுத்து ஹிஜாப் ஐகான் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close