மல்லிப்பட்டினத்தில் மீண்டும் பதற்றம்! பெண்ணுக்கு தடி அடி! அப்பாவி இளைஞர்கள் கைது!

மல்லிப்பட்டினத்தில் கடந்த 28ம் தேதி அன்று நடைப்பெற்ற கலவரத்தில் கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 17-6-14 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று இவர்கள் மூவரும் கையெழுத்திட  காவல் நிலையத்திற்கு சென்ற பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து நேற்று இரவு 7.45 மணியள்வில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும், ஊர் மக்களும் பெண்கள் உட்பட பலர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
மறியல் போராட்டத்தை நிறுத்த வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் மீது கடுமையாக தடி அடி புரிந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 7 முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
Close