அதிரையில் தெரிந்தது “சூப்பர் நிலவு”

70 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசயம் வருகின்ற 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆம் சூப்பர் மூன் எனப்படும் விண்ணில் ஏற்படும் முக்கிய நிகழ்வை நம்மால் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். சூப்பர் மூன் என்றால் என்ன? பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தைக் காட்டிலும் சற்றே பெரியதாக காட்சியளிக்கும் நிகழ்வு தான் சூப்பர் மூன் எனப்படுகிறது. இந்த அதிசய நிகழ்வில் நிலா 30% அதிக ஒளியுடன் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியிலிந்து சுமார் 3.84 லட்சம் கிமீ தொலைவில் நிலா அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். அப்போது வழக்கத்தைக் காட்டிலும் நிலா 48ஆயிரம் கிமீ பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வில் நிலா சற்றே பெரியதாகவும் கூடுதல் ஒளியுடனும் காணப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு சூப்பர் மூன் தோன்றியதாகவும் அதன்பின்னர் இன்று 14ஆம் தேதி மீண்டும் தோன்றவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதையடுத்து அதிக ஒளியுடன் கூடிய நிலவு அதிரையில் தென்பட்டது.img_7420

படங்கள்: அதிரை ஜெகபர் சாதிக்

Close