சி.பி.எஸ்இ 10ம் வகுப்பு மீண்டும் பொதுத்தேர்வு!

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு, 2017-18 கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வாக நடத்தப்படும் என மத்திய மனிதவள ஆதாரங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ம் வகுப்பு தேர்வும், 12ம் வகுப்பும் தேர்வும் 2010ம் ஆண்டுவரை பொதுத்தேர்வுகளாகவே நடந்து வந்தது. இந்நிலையில் 2010ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு தேர்வு மாற்றப்பட்டு மாணவர்களின் விருப்பத்துக்கு விடப்பட்டது. 10ம் வகுப்புத் தேர்வை பொதுத்தேர்வாக எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

எனவே, 10-ம் வகுப்பு தேர்வை முன்பு இருந்ததைப் போல கட்டாய பொதுத்தேர்வாக மாற்ற சிபிஎஸ்இ முடிவு செய்தது. இது குறித்து நிருபர்களிடம் ஜவடேகர் கூறுகையில், ‘‘கடந்த மாத இறுதியில் ஆலோசித்தபடி வரும் 2017-18ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இ 10 வகுப்புத் தேர்வுகள் கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படும்’’, என்றார்.

Close