ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டணம்!

ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பண்டிகை காலங்களில் மிக அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் போக்குவரத்துத் துறை ஆணையர், நிதித்துறை இணை செயலாளர், சாலை போக்குவரத்து துறை இயக்குநர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருப்பர்.

Close