இனவாத இலங்கையை இந்தியாவும் உலக நாடுகளும் கண்டிக்க வேண்டும், SDPI கட்சி கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின்

மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.
தெஹ்லான்
பாகவி இன்று வெளியிட்டுள்ள
அறிக்கை பின்வருமாறு….
இலங்கையின் இனவாத
வெறிக்கு லட்சக்கணக்கான தமிழர்கள்
பலியானார்கள். தமிழர்களின்
சொத்துக்களும், நிலபுலன்களும்
சிங்களர்களின் உடமையாக்கப்பட்டன.
இந்தப் போருக்குப்பிறகு இலங்கை ஈழத்
தமிழர்களை நிர்முலமாக்கியப்பின்
தற்போது இலங்கையின்
இனவெறி இலங்கையில் வாழும் மற்ற
சமூகங்கள் மீது திரும்பியுள்ளது.
அதனடிப்படையில் முஸ்லிம்கள்
மற்றும் கிறிஸ்தவர்கள்
மீது தொடர்ந்து இலங்கையில்
தாக்குதல்கள்
நடைபெற்று வருகின்றன.
மசூதிகளும், தேவாலயங்களும்
தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.
அரசின் ஆதரவோடு ‘பொது பல சேனா‘
போன்ற இனவெறி இயக்கங்கள்
வேருன்றி வலுப்பெற்று வருகின்றன.
கடந்த 12 ம் தேதி சுற்றுலா நகரமான
அழுத்கமாவில் ஒரு வாகன
பேருந்து ஓட்டுனருக்கும்,
மற்றொருவருக்கும் நடைபெற்ற
தகராறை காரணாமாக
வைத்து முஸ்லிம்களுக்கு எதிராக
பெரும் கலவரம் கடந்த 15 ஆம்
தேதி நிகழ்த்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் வணிக ஸ்தாபனங்கள்
சூறையாடப்பட்டும், தீக்கிரையாக்கப்
பட்டும் வருகின்றன. பள்ளிவாசல்கள்
தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. 50
க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ள
னர். கலவரங்களை கட்டுப்படுத்த
வேண்டிய இலங்கை அரசின்
காவல்துறை சிங்கள
வெறியர்களுக்கு பாதுகாவலர்களாக
செயல்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்
மீதே துப்பாக்கி சூட்டை நடத்தி 3
பேரை படுகொலை செய்துள்ளது.
அழுத்தமாவில் துவங்கிய கலவரம்,
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்
பலநகர்களுக்கும் பரவியுள்ளது.
முஸ்லிம்களை பாதுகாக்க தவறிய
இன வெறியர்களுக்கு துணைபோகும்
இலங்கை அரசுக்கு கடும்
கண்டனத்தை தெரிவிதுக்கொள்க
ிறேன். பொது பல சேனா எனும்
இனவெறி அமைப்பை உடனே தடைசெய்திட ்
நடவடிக்கை எடுக்கும்படி கெட்டுக்கொள்கிற
ேன்.
இலங்கை அரசின் இந்த
இனவெறிக்கு எதிராக சர்வேதேச
சமூகங்கள் கண்டன குரல் எழுப்ப
வேண்டும். ஐ.நாவின் மணித
உரிமை கமிஷன் தலைவர் நவநீதம்
பிள்ளை இதற்கு கண்டனம்
தெரிவித்துள்ளார்.
அதோடு நின்று விடாமல் மீண்டும்
ஒரு இனப்படுகொலைக்கு
தயாராகிவரும்
இலங்கையை கட்டுப்படுத்திட
முன்வரவேண்டும். இந்திய
அரசு இலங்கை தூதரிடம்
தனது கண்டனத்தை தெரிவிப்பதோடு இனிமேலும்
இதுபோன்ற இனவெறி தாக்குதல்
நடைபெறா வண்ணம்
இலங்கையை அறிவுறுத்த வேண்டும்.
சர்வதேச நாடுகளும்
இலங்கை அரசை கண்டித்திட
வேண்டும். இவ்வாறு அதில் அவர்
கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிதமர்
நரேந்திர
மோடி வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,
ஐ.நா.பொது செயலாளர் பான்கிமூன்
ஐநாவின் மனித உரிமை கவுன்சில்
தலைவர் நவநீதம்
பிள்ளை ஆகியோருக்கு மின் அஞ்சல்
மற்றும் பேக்ஸ் மூலம் எஸ்.டி.பி.ஐ
கட்சியின் மாநில தலைவர் கடிதம்
அனுப்பியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
Close