அதிரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சாலையோரம் பிறந்த குழந்தை!


அதிராம்பட்டினம்
மெயின் ரோட்டில் இன்று காலை 11:30 மணிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையோரம்
சத்தம் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். பின்னர் அப்பெண் அதிரை காவல் நிலைத்துக்கு
எதிரே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளே போய் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.

இச்சத்ததை
செவியுற்ற பொது மக்கள் விரைந்து சென்று கட்டிடத்தினுள் பார்த்த பொழுது அப்பெண்
வயிற்றில் குழந்தையுடன் பிரசவ வலியில் கதறிக்கொண்டிருந்தார். இதனை அடுத்து அப்பெண்ணுக்கு
பிரசவம் பார்க்கப்பட்டு அப்பெணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 
இதனை அடுத்து 108க்கு தாயையும் சேயையும் நலமுடன் மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Close