கிட்னி வழங்க முன்வந்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்!

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொறுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களான நியமத் அலி ஷேக், ஜான் ஷா மற்றும் முஜிப் அன்சாரி ஆகியோரும் நேற்று சுஷ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.

இவர்களில் தனது விருப்பத்தை சுஷ்மாவுக்கு ‘டுவிட்டர்’ மூலம் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஜிப் அன்சாரி, ‘நான் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். ஆனால், நீங்கள் எனக்கு தாய் போன்றவர். உங்களுக்கு எனது இரு சிறுநீரகங்களையும் தானமாக அளிக்க விரும்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.இதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், ‘மிக்க நன்றி சகோதரர்களே.., சிறுநீரகத்துக்கு மதமுத்திரைகள் கிடையாது என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Close