அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க கூட்டத்தில், கும்பகோணம் பொது சிவில் சட்ட பொதுகூட்டத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்ய முடிவு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதன் இளைஞர் அமைப்பு இணைந்து நடத்திய  ஆலோசனைக் கூட்டம் சங்க வளாகத்தில்  நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து கும்பகோணத்தில் வரும் 26-11-2016 அன்று சனி கிழமை மாலை5 மணியளவில் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு செல்வதற்கான வாகன ஏற்பாடு செய்வதற்க்கு எல்லா பள்ளிவாசல்களிலும்  அறிவிப்பு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது  அனைவரும் பள்ளிகளில் அவரவர்களுடைய பெயரை முன் கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளபட்டது.img_7634img_7633

Close