மளிகை வியாபாரிகளின் பிழைப்பில் மண்னை போட வருகிறது ப்ளிப்கார்ட்!

இந்தியாவில் இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஃப்லிப்கார்ட், மளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி அதன் தலைமை நிர்வாகி பின்னி பன்சால்,’லாபம் தரக்கூடிய வகையில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய முடியும் என்றாலும், அது கடினமான பணிதான். இருப்பினும் சாத்தியமற்றது அல்ல.’ என்று கூறியுள்ளார்.

மளிகை பொருட்கள் விற்பனையை அடுத்த ஆண்டு சோதனை முறையில் தொடங்க உள்ளதாக ஃப்லிப்கார்ட் தெரிவித்துள்ளது. ஃப்லிப்கார்ட் நிறுவனத்துக்கு அனைத்து மட்டங்களிலும் போட்டியாளராக உள்ள அமேசான் நிறுவனம், மளிகைப் பொருட்கள் விற்பனையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில்லரை வணிகர்களின் வியாபாரம் மத்திய அரசின், முதலாளித்துவ கொள்கையின் காரணத்தால் நசுங்கியுள்ள நிலையில் பிளிப்கார்டின் இந்த முயற்சியால் ஏழை வியாபாரிகளின் நிலை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது.

Close