பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த தடை!

வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கப்படுவதால் ஏற்படும் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும், அதற்கு தடைவிதிக்கவும் கோரிய வழக்கில் அவற்றை வைக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேல் என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை வழிபாட்டுத் தலங்களில் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

பள்ளிவாசல்களில் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாங்கு சொல்லப்பட்டு வந்த நிலையில் இஸ்லாமியர்களை தொடர்ந்து வேதனைக்கு ஆளாக்கும் விதத்தில் தீர்ப்பை வழங்கி வருகிறது.

Close