முத்துப்பேட்டையில் பதற்றம்! பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிய அகற்ற சொல்லிய போலீசார்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை முன்னிட்டு பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள், போன்ற வழிபட்டு தளங்களில் பயன்படுத்தி வந்த   கூம்புவடிவ ஒலிபெருக்கியை  பயன்படுத்துவதற்கு  இனி அனுமதி இல்லை என்று  உத்தரவு பிறப்பித்து இருந்தது  இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக மேல்முறையிட்டு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது

மேலும் ஒலிபெருக்கியின் சப்தம்  70 டெசிபலுக்கு மேல் இருக்க கூடாது என்ற உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில்  நிர்நினைத்த அலுவுகளில் ஒலிபெருக்கியை மாற்றி அமைத்து விட்டார்கள் இருந்தும் காவல்துறையின் அடாவடி தனத்தால் மீண்டும் எல்லாபள்ளிவாசல்களுக்கும் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு  பிதியையும் வீண் பரப்பையும் ஏற்படுத்துகிறார்கள் இதே போல் முத்துப்பேட்டை காவல் துறையும் தன்பங்கிற்கு

இன்று முத்துப்பேட்டை காவல் துறை சார்பாக  வாகன விளம்பரம் செய்யப்பட்டது

அதன் சாராம்சம்;

முத்துப்பேட்டை காவல் துறை சார்பாக அறிவிப்பு
முத்துப்பேட்டை காவல் துறை சரக  எல்லைக்குட்பட்ட  இடங்களில்
கோவில்கள்  பள்ளிவாசல்கள்  தர்காக்கள் சர்ச்சுகள்  போன்ற இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு  உயர்மன்ற உத்தரவை தொடர்ந்து  இன்று ( 22.11.2016) முதல் மலை 6.00 மணியிலுருந்து   கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை சார்பாக  கண்டிப்பாக இறுதியாக  தெரியப்படுத்தி கொள்கிறோம் இது நாள் வரை  பயன்பாட்டில் இருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது

இந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கி  கல்யாணம் போன்ற விசேஷம் கோவில் தர்கா சர்சி   திருவிழாக்கள்  அரசியல் பொதுக்கூட்டங்கள்  போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும்  கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.

என்று முத்துப்பேட்டை காவல் துறை சார்பாக வாகன விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

இதனால் முத்துப்பேட்டையில் முஸ்லீம் மக்கள் மத்தியில்  பரபரப்புஏற்பட்டுள்ளது

இன்று மாலை  அணைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு சார்பாக அவசர ஆலோசனை கூட்டம்    புது பள்ளி வாசலில்  நடைபெற உள்ளது என்பது முக்கிய செய்தி

Close