சவூதியில் கஃபாவை முகநூலில் இழிவுபடுத்தியவர் கைது!

முஸ்லிம்களின் புனித இடம் மக்கா. அங்குள்ள கஃபா இருக்கும் திசையை நோக்கியே உலக முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்றனர். இந்நிலையில் கஃபாவின் மேலே சிவலிங்கம் இருப்பது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் சங்கர் பொன்னம்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ரியாத்தில் விவசாய பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் பதிந்த அந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவியது இதனை அடுத்து அவர் சைபர் கிரைம் குற்ற வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சங்கர் பொன்னம் கஃபாவை அவமதிக்கும் வகையில் பதிந்த பதிவு குறித்து அறிந்த சிலர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் அடிப்படையில் அவரை தாக்கியவர்கள் மீதும் சவூதி காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Close