குற்றாலத்தில் எண்ணெய், சோப்பு, ஷாம்பு தேய்து குளிப்பதற்கான தடை தொடரும்

குற்றாலத்தில் எண்ணெய் குளியல், ஷாம்பு பயன்படுத்த ஏற்கனவே உள்ள தடை நீடிக்கப்படுவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.எண்ணெய் குளியல்குற்றாலம் அருவில் எண்ணெய் சிகைக்காய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ‘அருவியில் பாரம்பரியமாக எண்ணெய், சிகைக்காய் பயன்படுத்தினர். வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர்கள், அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவில்லை. இந்த உத்தரவால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எண்ணெய், சிகைக்காயால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாது. உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்.

அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்’ என, மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவுப்படி இதை ஆய்வு செய்த நிபுணர் குழு, ‘தற்போது விற்பனையாகும் சிகைக்காய் செயற்கையானவை; ரசாயனம் கலந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஜூலை – ஆகஸ்ட் சீசனின் போது தினமும் ஒரு லட்சம் பேர் குற்றாலம் வருகின்றனர். எண்ணெய் பயன்படுத்தினால் தண்ணீரில் அமிலத்தன்மை அதிகரிக்கும்’ என, கூறினர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, குற்றாலத்தில் எண்ணெய் குளியல், சிகைக்காய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்த ஏற்கனவே பிறப்பித்த தடை நீடிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Close