கேரளாவில் இஸ்லாத்தை ஏற்றதற்காக படுகொலை செய்யப்பட்ட அனில் குமார் என்னும் பிலால் (வீடியோ)

கேரளாவை  சேர்ந்த அணில் குமார் எனப்படும் இவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை பைஸல் என்று மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் முழுமையான ஆசையுடன் ஆர்வத்துடனும் நல்ல வணக்கங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன் விடுமுறையில் கேரளா  சென்ற இவர் தன் குடும்பத்தினருக்கும் புனித இஸ்லாம் பற்றி விளக்க, சென்றவாரம் அவரின் மனைவி உட்பட மற்றும் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர். இதனைப் பொறுக்க முடியாத சில இந்துத்துவ தீவிரவாதிகள்  சென்ற சனிக்கிழமை அதிகாலை பஜ்ருடைய தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் வழியில் இவரைக் கொலைசெய்துள்ளனர்.

இந்த செய்தி தமிழ் ஊடகங்களில் மறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது  வாட்ஸ் அப் மூலம் பரவி வருகிறது, யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து, இவருக்கு அருள் புரிவாயாக ! இவரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும் இஸ்லாத்தில் உறுதியையும் கொடுப்பாயாக!

15178954_1675024929495027_1942258402821182976_n-copy

Close