அதிரையில் பரபரப்பு! கனரா வங்கியை கண்டித்து ECR சாலையில் மக்கள் மறியல்! (படங்கள் இணைப்பு)

கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிரை கனரா வங்கியில் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிரை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து வங்கி நிர்வாகம் சிலரை அழைத்து இன்று 300 நபர்களுக்கு மட்டும் 2000 ரூபாய்களை வழங்குவதாகவும், மற்றவர்கள் திங்கள் அன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியது. ஆனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்ததால், வங்கியின் இந்த முடிவையும் ஏற்க மறுத்துள்ளனர். மத்திய அரசின் அடாவடி அறிவிப்பால், தாங்கள் சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே மக்கள் அவலப்படும் நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.

img_7717 img_7718 img_7719 img_7720 img_7721

15178152_1116899945053926_7573146982761525529_n 15178152_1116899945053926_7573146982761525529_n 15181343_1116899515053969_4013493983756408609_n 15181343_1116899515053969_4013493983756408609_n 15134537_1116899728387281_8290159560121225712_n 15203195_1116899571720630_1044749575752967962_n

Close