Adirai pirai
posts

அமீரகத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச வை-பை வசதி!

அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்நிலையில் அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான ‘எடிஸலாட்’ தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமீரகவாசிகளும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 300க்கு மேற்பட்ட பொது இடங்களில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை இலவச அதிவேக வைபை (WIFI) சேவையை வழங்குகிறது.

 
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச வைபை சேவைகளுடன் கூடுதலாக ஷாப்பிங் மால்கள், உயர்தர காபிடேரியாக்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு பொது இடங்களிலும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் etisalat.ae/wifi என்ற இணைய தளத்திற்கு சென்றோ அல்லது ‘Around Me’ எனும் எடிஸலாட் ஆப் வழியாகவோ இலவச வைபை சேவை கிடைக்கும் இடங்களை அறியலாம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy