அதிரையை அதிகாலையில் சூழ்ந்த ஆழ்ந்த பனி! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை என இரண்டும் பொய்த்துபோனது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 71 சதவீதம் மழை குறைவாக தமிழகத்தில் பெய்துள்ளது. அதிரையிலும் மழை பெரிய அளவில் கொட்டித்தீர்க்கவில்லை. இந்த நிலையில் வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதிரையில் பனிகாலம் துவங்கியுள்ளது. இன்று அதிகாலை அதிரை முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது.

படங்கள்: ஹாஜா முஹைதீன்

Close