Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மிராஷா என்ற நபருக்கு TNTJ சார்பாக நிதி உதவி

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு நிதி உதவி                            அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் மீராஷா ( 45 ). அதிராம்பட்டினம் பகுதிகளில் சுண்டல் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ரம்ஜான் பேகம் என்ற மனைவியும், 10 ம் வகுப்பு கல்வி பயிலும் 15 வயது மகள் மற்றும் 4 ம் வகுப்பு கல்வி பயிலும் 10 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.

கடந்த 2014 ம் ஆண்டில் மூக்கில் கட்டி ஏற்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. இதன் பின்னர் இம்மருத்துவமனையில் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில், முகத்தின் தாடை பகுதியில் மீண்டும் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் தாடை அகற்றப்பட்டன. இதனால் இவரது முழுமையாக பேசும் திறன் குறைந்துவிட்டது. மேலும் இவரது இடது கண் முற்றிலும் செயல் இழந்துவிட்டன. கண்ணாடி அணிந்துபடி வெளியே சென்று வருகிறார். கடந்த 1- 1/2 ஆண்டுகளாக சுண்டல் வியாபாரத்தை நிறுத்திவிட்டார்.

தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் மருத்துவர் அறிவுரையின் படி மாதத்திற்கு இரண்டு முறை மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் தவித்து வருகிறார். மேலும் இவர்களது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது.
புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை மற்றும் அன்றாட வாழ்வாதார உதவிக்காக இக்குடும்பத்தினர் நிதி உதவி கோரி இருந்தனர்.

இதையடுத்து ஈரோடு சகோதர ர் நம் ஜமாத்தை தொடர்பு கொன்டு ரூபாய் 20 ஆயிரம் கிளை வங்கி கணக்கிற்கு அனுப்பினார்கள் அதனை அதிரை TNTJ-1 நிர்வாகிகளும் கடற்கரைத்தெரு ஜமாத்தார்களும் நோயாளியின் இல்லம் சென்று நலம் விசாரித்து நிதியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். நிதியை பெற்றக்கொண்ட குடும்பத்தினர் உதவியளித்த அனைத்து நல்லுலங்களின் ஈருலக வாழ்வு சிறக்க ‘துஆ’ செய்து, நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.
இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது தவ்ஹீத் ஜமாஅத் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:

A/c Name : MEERASHA

Bank Name : CANARA BANK

Branch : ADIRAMPATTINAM BRANCH

A/C No. 1201 1010 52396

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy