அதிரையில் போலீசார் குவிப்பு! 

அதிரை ஈசிஆர் சாலையின் இருபகுதிகளிலும் 10 அடி அகலத்துக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்றும், இதனை அகற்ற வேண்டும் எனவும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று இரவு அதிரையில் ஈசிஆர் பகுதிகளில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இவற்றில் அகற்றப்படாத மேலும் சிலவற்றை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் இடித்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அதிரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Close