தமிழகத்தை அச்சுறுத்தும் நாடா புயல்!

நாடா புயல் எதிரொலியாக, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து, ஐந்து கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவாகியுள்ள, ‘நாடா’ புயல், டிச., 2ம் தேதி புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே, கடலூர் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வானூர் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு, நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பள்ளிக்கல்விதுறை பிறப்பித்துள்ளது.

Close