அதிரையில் ப்ளாஸ்டிக் முட்டையா?

தமிழகம் முழுவதும் மக்களை தற்பொழுது அதிர்ச்சியடைய வைத்துள்ளது ப்ளாஸ்டிக் முட்டை குறித்த தகவல். இது திருச்சி, சேலம், நாமக்கல் என எங்கும் பரவி வருவதாகவும், முட்டையை உடைத்து ஊற்றும் போது, முட்டை தோளின் உள்பகுதியில் பாலிதீன் போன்ற ஒரு படிவம் வித்தியாசமாக வருவதாகவும் கூறியுள்ளனர். இது குறித்த ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் அதிரையை சேர்ந்த SOS.பாட்சா தனது அதிரையில் உள்ள ஒரு கடையில் வாங்கி உடைத்த 5 முட்டைகளும் ப்ளாஸ்டிக் முட்டைகள் எனவும், இதன் உள்பகுதியில் உள்ள ஒரு தோல் பாலிதீன் படிவம் இருப்பதாகவும், அதனை எரித்தால் ப்ளாஸ்டிக் வாடை வருவதாகவும், தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு மிகவும் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Close