முத்துப்பேட்டையில் காணாமல் போன தாயை தேடி அலையும் மகள்கள்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை செம்படவன்காடு வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் சுப்பையன், இவர் கேரளாவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மாணவி கோவிந்தம்மாள்(60), இவர்களுக்கு மணியம்மாள், சுகுணா ஆகிய இரு பெண்கள். இந்தநிலையில் கடந்த 24.08.2016 ந்தேதி வீட்டில் இருந்த கோவிந்தம்மாள் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இரு மகள்களும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவர் வீடுகளிலும் தேடியும் கோவிந்தம்மாள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கடந்த 27.08.2016 ந்தேதி முத்துப்பேட்டை காவல்நிலைத்தில் மூத்த மகள் மணியம்மாள் புகார் செய்தார். ஆனால் 02.09.2016 ந்தேதிதான் புகார் குறித்து சப் இன்ஸ்பெக்டர் கபீர்தாஸ் வழக்கு செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் இதுநாள்வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

 இதனால் மகள்கள் இருவரும் தனது தாயை தேடி கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு முக்கிய பகுதிகளிலும், கோவில்களிளுக்கும் சென்று தேடி அலைந்து வருகின்றனர். யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவுசெய்து இதில் பதிவு செய்யவேண்டுகிறேன்.
மு.முகைதீன் பிச்சை

முத்துப்பேட்டை

Close