குர்குரே சாப்பிட்டு பெப்சி குடித்த பள்ளி மாணவர் மரணம்!

குர்குரேவை வாங்கி சாப்பிட்ட மாணவன் திடீரென இறந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையாறு, இந்திரா நகர் 16வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ், தொழிலதிபர். இவரது மகன் திருஷ் சேவியோ (17). இவர், அடையாறு காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கடையில் இருந்து வாங்கி வந்த பிரபல தனியார் நிறுவன தயாரிப்பான குர்குரே திருஷ் சேவியோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

Image result for pepsi with kurkure

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே திருஷ் சேவியோ பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து பெற்றோர் கதறினர். இதையடுத்து, நேற்று முன்தினம் திருஷ் சேவியோ படித்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பிரபல தனியார் நிறுவன தயாரிப்பான குர்குரே சாப்பிட்டு பிளஸ் 2 மாணவன் இறந்த சம்பவம், தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து பெற்றோர் தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ போலீசில் புகார் அளிக்கப்படவில்லை சிறுவர், சிறுமிகள் விரும்பி வாங்கிச் சாப்பிடும் குர்குரே சாப்பிட்டதில் பிளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் மற்ற பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Close