அமீரகத்தின் 45வது தேசிய தினம் இன்று!

1971 டிசம்பரில் 2 ஆம் தேதி ஐக்கிய இராஜியத்திடம் இருந்து விடுதலை பெற்று ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்டது. அபுதாபியை தலைநகரமாக கொண்டுள்ள இந்த நாடு அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகளின் இணைப்பு நாடாகும். இதன் முதல் அதிபராக சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதையடுத்து வருடா வருடம் டிசெம்பர் 2 ஆம் தேதி அன்று  தேசிய தின  விழா  கொண்டாட்டப்படுகிறது. அந்த வகையில் இன்று 45வது தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாட்டங்களின் போது ஏழு எமிரேட்டுகளிலும் வான வேடிக்கைகள், வாகன அணிவகுப்பு ஆகியவை நடத்தப்படும்.

Close