மல்லிப்பட்டினத்தில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து SDPI நடத்திய ஆர்ப்பாட்டம் (வீடியோ)

மல்லிப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜலாலை பொய் வழக்கில் கைது செய்த சேதுபாவா சத்திரம் காவல்துறையினரை கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று (09/06/2014) மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி தலைமையில் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் ஃபாரூக், மாநில துணைத் தலைவர் சம்சுதீன் உள்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Close