விசா நடைமுறை தொடர்பாக கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லாஹ் – மோடி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

நேற்றைய தினம் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து முடிவெடுக்க கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லாஹ் அரச முறை பயணமாக டெல்லி வந்தடைந்தார். இதையடுத்து இன்று, மோடியை அவர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில், முதலீடுகள் மற்றும் விசா தொடர்பாக கத்தார் – இந்தியா இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுமட்டுமின்றி இருநாடுகளுடனான சைபர் குற்றங்கள் குறித்தும், எரிவாயு இறக்குமதி குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் மொத்த எரிவாயு இறக்குமதியில் கத்தாரிடம் 66 சதவீதம் பெற்று வருவதுடன், கத்தாரில் மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

Close