டிசம்பர் 6 போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கண்ணன் என்ற இந்து மத சகோதரன்!

#கண்ணன்_ஆகிய_நான்_விடும் #பாபரி_மஜ்ஜித்_போராட்ட_அழைப்பு.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் 

உயர்தேசமான நம் தேசத்தில்…

நம்மோடு தாயாய் பிள்ளையாக மாமன் மச்சானாக இரத்த உறவினர்கள் போல 

நெருங்கி பழகி வந்தனர் இஸ்லாமியர்களும் 

நான் சார்ந்த இந்து சமுதாய மக்களும்.

இப்படி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்..

இந்த தேசத்தில் 

ஆட்சியை பிடிப்பது பகல் கனவுதான் என 

திட்டம் தீட்டிய பாசிச கும்பல்..

சர்வாதிகாரி ஹில்டரிடம்

நெருக்கமாக இருந்த

முசோலினியிடம் ஒற்றுமையாக இருக்கும்மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பது என்ற பாடத்தையும்..

கோயபல்ஸ் என்பவனிடம்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற 

கேவலமான வித்தையும் கற்றுக்கொண்டவர்கள்..

பல்வேறுபட்ட கலாச்சார மக்களை 

உள்ளடக்கிய கதம்ப மாலையாக 

காட்சி தரும் 

ஒற்றுமை தேசமான இந்தியாவை 

பிளவுபடுத்த முயன்றார்கள்..!

அதன் ஒரு பகுதியாக
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இயன்றவரை பாடுபட்ட காந்தியை நான் சார்ந்த இந்து கடவுளான ராமனை வழிபடும் கூட்டத்திலேயே துடிக்க துடிக்க சுட்டுக்கொன்றனர்.!

அதுவும் இந்துமதத்தை சார்ந்த

கோட்சே என்ற பாசிசவாதி

இஸ்மாயில் என கையில் பச்சை குத்திக்கொண்டும்

கொலை செய்ய துணிந்தார்கள்.

ஒரு வேளை தாம் கொல்லப்பட்டால் காந்தியை கொன்ற பலி முஸ்லிம்கள் மீது விழ வேண்டும் என்ற 

கீழ் தரமான எண்ணத்தில் 

சுன்னத் செய்து கொண்டும் 

இந்த படுபாதக செயலில் ஈடுபட்டான்..!

உண்மை வரலாறு இப்படி இருக்க 
ஒரே பொய்யை திரும்ப திரும்ப 

ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியை கட்டினார் என இதே பாசிஸ்ட்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.!

மக்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்ற 

கீழான எண்ணத்தில்..

செய்யப்படும் செயல்தான் இவர்கள் திரும்ப திரும்ப சொல்லும் கோயிலை இடித்துதான் 

மசூதியை கட்டினார் என சொல்லாடல்..

என் பார்வையில்..
இந்திய விடுதலைக்கு முன்பு 

நடந்த போர்கள் குறித்தோ சம்வங்கள் குறித்தோ எந்த கவலையும் இல்லை..

பகிரங்கமாக கேட்கிறேன் 

சுதந்திரம் பெற்று 

இந்த அறுபத்தி எட்டு ஆண்டுகள் ஆகி விட்டது

எந்த இஸ்லாமியகளாவது

இதுவரை எந்த ஒரு கோயிலையாவது

 இடித்து இருக்கிறார்களா..?

இல்லை நண்பர்களே.!!

நான் இஸ்லாமிய நண்பர்கள் உடன் தான் பல்லாண்டுகள் 

தொழில் ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தாயாய் பிள்ளையாக உறவினர்கள் போல பழகி வருகிறேன்..!

நான் அறிந்த வரையில்
பாசிச சக்திகள் சொல்வது போலவோ

அதை அப்படியே வாந்தி எடுக்கும் ஊடகங்கள் போலவோ இங்கு யாரும் இல்லை..

அதர்மத்தை அழிக்க 

தர்மத்துடன் கை கோர்ப்பது

ஓர் உண்மையான கடவுள் நம்பிக்கையாளனின் கடமை.!

அந்த அடிப்படையில்

சத்தியத்தை நிலைநாட்ட..

நான் இந்து சமுதாயத்தை சார்ந்தவனாக இருந்தாலும் .

நியாயத்தின் பக்கம் நின்று

குரல் கொடுக்க முடிவு செய்துவிட்டேன்.!

அதன் அடிப்படையில்

எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும்

ஆளும் கட்சி .எதிர்கட்சி .

சாதி கட்சி என பல இருந்தாலும்.

இஸ்லாமியராக இருந்தாலும்

நடுநிலையோடு அனைவரையும் அரசியல் களத்தில் அரவனைத்து செல்லும் இளம் அரசியல் தலைவரான அண்ணன் தமிமுன் அன்சாரி அவர்களின்

தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட துணைச் செயலாளராகவும்

பணிபுரிகிறேன்.!

இந்தியர்களின் ஒற்றுமைக்கு

வேட்டுவைத்த இந்த பாபர் பள்ளிவாசல் பிரச்சனையில்

சலுகையோ கட்டப்பஞ்சாயத்து

தீர்ப்போ தேவையில்லை

சட்டப்படியான தீர்ப்பை

விசாரித்து விரைவாக 

வழங்க கோரி 

மத்திய அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில்

நான் சார்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.!

எனவே மதங்களை கடந்து

இந்து முஸ்லிம் கிறித்தவ ஒற்றுமையை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சிகளை எதிர்த்தும் .!

நீயாயவான்களே அணி திரள்வோம் …

இரயில் நிலையம் நோக்கி..

அனைவரையும் அன்போடு

அறைகூவல் விடுத்து அழைக்கிறேன்.!

இப்படிக்கு

என்றும் நீதியின் பக்கம்

K.கண்ணன்

திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்.

மனித்நேய ஜனநாயக கட்சி.

9994976033

Close