டெல்லியில் சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்ற முஹம்மது யூனுஸ்!

All India Achiever Conference (AIAC AWARD) இன்று இந்திய தலைநகரமான டெல்லி, சம்ராத் நட்சத்திர ஹோட்டலில் கவுதல்யா ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள சிறந்த எழுத்தாளர், கல்வியாளர், சமூக சேவகர்களுக்கு AIAC Award வழங்கப்பட்டது.

இதில் பரங்கிப்பேட்டை முன்னால் பேரூராட்சி மன்ற தலைவர், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாதின் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாவட்ட சிறுபான்மை நலபிரிவு அமைப்பாளருமான லயன். டாக்டர். ஹாஜி M.S.முஹம்மது யூனூஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவை சாதனையாளர் விருதை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அஜய் தம்தா (Minister of Textile) அவர்கள் வழங்கினார்.

img_9380

மேலும் அவரது பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோம்!

Close