சென்னையில் நடைபெற்ற அதிரை ADWA வின் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் டெவெலப்மெண்ட் அன்ட் வெல்ஃபேர் அசோஸியேசன் (ADWA) சார்பாக அரசு உயர் பதவி வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இன்று 4-12-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் சென்னை மன்னடியில் உள்ள இந்தியன் பேலஸ் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கீழ்காணும் நிகழ்வுகள் நடைபெற்றன.

வரவேற்புரையை ஜனாப். A. அஷ்ரப் அலி (துணைத் தலைவர், ADWA) நிகழ்த்த ஜனாப். A. முஹைதீன் அப்துல் காதிர் (தலைவர், ADWA) அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக பேராசிரியர். சே.மூ.மூ. முஹம்மது அலி, பேராசிரியர். ஜெ. ஹாஜாகனி (தமிழ்த்துறை, காயிதேமில்லத் கல்லூரி, சென்னை), பேராசிரியர். முஹம்மது ரபீக் (ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை) ஆற்றினர்.
நன்றியுரையை MMS. ஜாபர் சாதிக் (கூடுதல் செலாளர், ADWA) நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் பதவிகளில் இடம்பெறுவதற்கான போட்டி தேர்வுகளில் பங்கெடுப்பது எப்படி? TNPSC தேர்வு போன்ற அரசு வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? அதற்கான அவசியம் என்ன? போன்ற விளக்கங்களை காட்சிப்படங்கள் உதவியுடன் விளக்கப்பட்டது.

img_9404 img_9405 img_9407 img_9408 img_9409 img_9410 img_9411 img_9412 img_9413

Close