அதிரை “உங்களுக்கு தெரியுமா?” அஹமது முகைதீனுக்கு SISYA சார்பாக நிதி உதவி!

அதிரை கீழத்தெருவை சேர்ந்தவர் அஹமது முஹைதீன். கண்பார்வையற்ற இவர், ஆட்டோவில் விளம்பரம் செய்துவந்தார். தனது தனித்திறமையான பேச்சாற்றல் மூலம் அதிரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். தனது கனீர் என்ற குரலால், தான் சொல்ல வந்த  தகவலை அனைவர் மனதிலும் பதிய வைக்க கூடியவர். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஏற்பட்ட விபத்தில் கால் முறிந்து வீட்டில் முடங்கியுள்ளார். இதையடுத்து, இவருக்கு சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் சார்பாக ரூ.14,000 வழங்கினர். இதில் சங்க தலைவர் அஹமது அனஸ், செயலாளர் சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ் அஹமது அவர்கள் உடனிருந்தனர்.

Close