முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு!

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இதவியல் மற்றும் சுவாசயியல் நிபுணர்கள் முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Close