அதிரையில் நடைபெற்ற சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பினுடைய மாதாந்திர கூட்டம் இன்று சங்க வளாகத்தில் நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு துவங்கிய இந்த கூட்டத்தில் இளைஞர் அமைப்பின் தலைவர் அஹமது அனஸ் வரவேற்புரையாற்றினார், இதில் செயலாளர் M.F.முஹம்மது சலீம் கடந்த மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொது சிவில் சட்டத்துக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொள்ள முஹல்லாவாசிகளை அழைத்து செல்ல வாகன ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் இத்ரிஸ் அஹமது, பொருளாளர் சேக் அலி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இதில் பல முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

Close