பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான விஜய் பண்டிட் சுட்டுக் கொலை: உ.பி.யில் பதட்டம்

பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் பண்டிட் உ.பி.யில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் சுட்டுகொல்லப்பட்டார்.பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டு ஏராளமான பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவத்தால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், தற்போது பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியான விஜய் பண்டிட்டும் கொல்லப்பட்டுள்ளார்.
Close