முத்துப்பேட்டையில் தீவிரவாதி போன்று பைக்கிள் வந்த இளைஞனால் பரபரப்பு!

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று பகல் ஒரு பைக்கிள் முகம் முழுவதும் கர்சிப் கட்டி மூடிக் கொண்டு தீவிரவாதிப் போன்று பின்னாடி ஒரு சிறுவனை வைத்துக் கொண்டு அங்கமிங்குமாக சுற்றி திரிந்தார். பல கடைகளில் இல்லாத பொருட்களை சாலையில் நின்றவாரு கேட்டு சென்றதால் வியாபாரிகள் மத்தியில் அந்த இளைஞர் மீது சந்தேகப் பார்வை ஏற்பட்டது. 
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த துனிச்சலான இளைஞர்கள் சிலர் சம்மந்தப்பட்ட இளைஞரை மடக்கி பிடிக்க முயன்றபோது பைக்கை வேகமாக செலுத்தி தப்பி ஓடினார். யார் அந்த இளைஞர்? முகத்தை மூடுவதன் காரணம் என்ன? வெயிலை சமாளிக்க போட்ட வேசமா? அப்படியனால் ஏன் தப்பி செல்ல வேண்டும்? என பல கேள்விகளை தப்பி ஓடிய இளைஞர் மீது வியாபரிகளுக்கும் பொது மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
     நிருபர்

முகைதீன் பிச்சை

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close