அமைதியில் அதிராம்பட்டினம்! (படங்கள் இணைப்பு)

நேற்று டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவருடைய உடல் தேறி வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு ஜெயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 
இந்த நிலையில் இவர் நேற்று இரவு காலமானார். இதையடுத்து இவரது மரணத்தையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிராம்பட்டினம் முழுவதும் மயான அமைதி நிலவி வருகிறது.

Close