Adirai pirai
உள்ளூர் செய்திகள்

சென்னை மண்ணடியில் மதிய உணவு வழங்கிய அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

நேற்று டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவருடைய உடல் தேறி வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு ஜெயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் இவர் நேற்று இரவு காலமானார். இதையடுத்து இவரது மரணத்தையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னையில் உணவகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள மண்ணடியில் அதிகளவில் படிப்புக்காகவும், பணி நிமித்தமாகவும் தங்கியிருக்கும் மாணவர்கள், இளைஞர்களுக்கு உணவளிக்கும் நோக்கில் இன்று சென்னை வாழ் அதிரையர்கள் உணவு ஏற்பாடு செய்து வழங்கினர். சென்ற ஆண்டு வெள்ள நிவாரண பணிகளில் தங்களை அர்ப்பணித்த இவர்கள், இந்த ஆண்டும் இது போன்ற இக்கட்டான நிலையில் தவிக்கும் நபர்களுக்கு மேலான உதவியை செய்துள்ளனர்.