முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

அரசு மதியாதையுடன் 60 குண்டுகள் முழங்க ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் தமிழக அளூநர் வித்யாசாகர ராவ் இறுதி மரியாதை செலுத்தினார். மத்திய அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தோழி சசிகலா இறுதிச்சடங்கு செய்தார். உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
திருனாவுக்கரசர் , வைகோ உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதையை செலுத்தினர். முன்னதாக பொதுமக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கில் இருந்து தொடங்கியது. அண்ணாசலை, வாலாஜா சாலை வழியா எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சாலையில் இருபுறமும் கூடிநின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கபட்ட ராணுவ வாகனத்தில் ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்படுகிறது. 
எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுகிறது. முப்படைகள் மூலம் ஜெயலலிதா உடல் ஊர்வலம் எடுத்து செல்லப்படுகிறது. தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகள் மூலம் ஊர்வலம் தொடங்கியது. இறுதிச்சடங்கில் தமிழக அளூநர் வித்யாசாகர ராவ் பங்கேற்கின்றார். மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திருநாவுக்கரசர் , வைகோ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள், அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஊர்வலத்தில் நடந்து செல்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்துகின்றனர். ஜெயலலிதா உடலுடன் ராணுவ வாகனத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்துடன் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் செல்கிறார்.

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரணாப் முகர்ஜி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினர். குடியரசு ஆறுதல் கூறியபோது துக்கம் தாளாமல் பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டு அழுதார். உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவல் தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஜெயலலிதா உயிரிழந்த தகவலையடுத்து இந்திய அளவில் உள்ள அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இதனையடுத்து ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் உள்ள ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

Close