அதிரையில் அதிமுக வினர் அமைதி ஊர்வலம்! (படங்கள் இணைப்பு)

நேற்று டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவருடைய உடல் தேறி வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு ஜெயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் இவர் நேற்று இரவு காலமானார். இதையடுத்து பிரதமர் மோடி, குடியரடு தலைவர் பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட எராளமான முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியின் அருகே மாலை 5:45 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிரையில் இன்று மாலை அதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

Close