Dr.Pirai – கர்ப்ப காலங்களில் அமர்ந்திருத்தல்


அமர்ந்திருத்தல்:

பிரசவத்திற்கு முன்:

  •         கர்ப்பமுற்ற பெண்கள் சரியான
    இருக்கையில் வசதியாக             அமரவேண்டும் முதுகிற்கும், தொடைப்பகுதிக்கும் சரியான படி               ஆதாரம்  இருத்தல் அவசியம்.
  • தேவைப்பட்டால் முதுகிற்குக்
    கீழே சாய்மானத்தில் லம்பார் பேடை         (Lumbar Pad) வைக்கலாம்.
  •            இடுப்பெலும்பு வளையத்தில்(Pelvis) உள்ள தசைகள்       பாதிபடையாமல்      இருக்க,இரண்டு பக்கப்    புட்டங்களிலும்       சமமாக எடைப்பகிர்வு (Weight Distribition) இருக்க வேண்டும்.
  • அமர்ந்திருக்கும் போது பாதங்கள் தரயைத் தொட்டுக்கொண்டு
    இருத்தல் மிகவும் நன்று. அப்படி இல்லாத பட்சத்தில் சிறிது ஸ்டூல் அல்லது தலையணையைப்
    பாத்திற்குக் கீழே வைக்கலாம்.
  •    அமர்ந்திருக்கும் போது ஒரு கால் மீது மற்றொரு
    காலைப்போட்டு (அட்டினக்கால்) அமரக்கூடாது.
  •   இருக்கையின் கடைசிப் பகுதிவரை சென்று அமரவேண்டும்.

பிரசவத்திற்குப் பின்:

  •   குழந்தைக்குப்
    பால் புகட்டும் போது முதுகைமுன்னோக்கி வளையத்துக் குனிந்து இருப்பதால், முதுகுப்பாதிப்பிற்கு
    உட்படலாம். ஆதலால் சாய்மானம் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒன்றிற்கு மேற்ப்பட்ட
    தலையணைகளை மடியில் வைத்துப் பால் புகுட்டுவதன் மூலம் பின்புறம் குனிவதைத் தவிர்க்கலாம்.
  •    அமர்ந்து கொண்டு குழந்தையை உடை
    மாற்றும் போது ,முதுகை   வளைக்காமல் கால்களை மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, நேராக வைத்து  அவ்வேளையச் செய்யலாம்.
Close