ஒருநாளைக்கு 25 மணி நேரம்! விஞ்ஞானிகள் தகவல்!

பூமி சுற்றுப்பாதை தொடர்பாக விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதன்படி தற்போது வெளிவந்துள்ள ஓர் ஆய்வின் படி பூமியில் ஏற்பட்டு வரும் சில மாற்றத்தால் இதுவரை 24 மணி நேரமாக இருந்த ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 27 நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அளவு விரிவடைந்து வருவதாக பிரித்தானியாவின் நடிக்கல் அல்மானக் மற்றும் டர்ஹாம் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டு மில்லி நொடிகள் என்பது ஒரு நிமிடமாக மாற இன்னும் 6.7 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என கணக்கிட்டுள்ளனர்.

அதன்படி, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என்கின்றனர். அதன்பிறகு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இருப்பது 25 மணி நேரம் என மாறக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு சுற்றுசூழலில் ஏற்படும் சில மாற்றங்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக காற்றின் அடர்த்தி அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் பூமி சுற்றிவரும் நேரத்தின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Close