அதிரை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை!

அஸ்ஸலாமு அலைக்கும் உலமாக்களே கடந்த சில நாட்களாக தஞ்சைமாவட்டத்திலுள்ள பல பளளிவாசல்களில் இரவு நேரத்தில் திருடர்கள் பூட்டை உடைத்து விலை உயர்ந்த ஆம்ப்ளிஃபேர்களையும் மைக்கையும் திருடிச்சென்றுவிடுகிறார்கள்-

(1)கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கும்பகோணம் கருப்பூர் பள்ளிவாசலில் ஆம்ப்ளிஃபேர் திருடுபோயுள்ளது

(2)மேலக்காவேரி பள்ளியில் திருடமுயற்சி செய்துள்ளார்கள்

(3) 11:12:2016,ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் (ஆடுதுறை அருகிலுள்ள) திருமங்கலக்குடி மதார் பள்ளிவாசலில் பூட்டை உடைத்து இரண்டு விலை உயர்ந்த ஆம்ப்ளிஃபேர் மற்றும் மைக்கையும் திருடிச்சென்றுவிட்டார்கள்

(4)அதிகாலை திருவிடைமருதூர் அருகிலுள்ள முத்தூர் என்ற கிராமத்திலும் ஆம்ப்ளிஃபேர் திருடப்பட்டுள்ளது ஒரு பெரிய திருட்டுக்கும்பல் கூட்டாக இவ்வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் எனவே தஞ்சை மாவட்டதில் உள்ள பள்ளிவாசல் இமாம்களும் நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு மற்றும் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்துமாறும் ஒவ்வொரு பள்ளியிலும் அலாரம் பொருத்திக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இத்தகவளை மற்றவர்களுக்கும் ஃபார்வேடு செய்யவும் வஸ்ஸலாம் 

இப்படிக்கு-N.அப்துல் காதர்-தாவூதி இமாம் திருமங்கலக்குடி…!

Close