அதிரையில் காணாமல் போன 12b பேருந்து

நமதூரில் காலை 5:30 மணிக்கு  அரசு 12b பேருந்து பட்டுகோட்டைக்கு தினமும் செல்வது வழக்கம் . இதில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் செல்வது வழக்கம். 

வார விடுமுறைக்காக திருச்சியில் இருந்து ஊருக்கு வரும் ஜமால் முகம்மது. M.I.E.T, M.A.M போன்ற கல்லூரிகளில் பயிலும்  மாணவர்கள் திங்கள் கிழமை அதிகாலை இந்த பேருந்தில் சென்றால் பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் முறையே பேருந்துகளில் ஏறி கல்லூரி துவங்கும் நேரத்துக்கு சென்று விடுவர். 

ஆனால் சில மாதங்களாக மல்லிப்பட்டினத்தில் இருந்து வரும் இப்பேருந்து இந்த நேரத்துக்கு வராத காரணத்தினால் அடுத்து 5:50 மணிக்கு சாமியப்பா பேருந்தில் தான் செல்ல வேண்டியுள்ளது. இப்பேருந்தில் கூட்டம் கடுமையாகவே காணப்படுகிறது. இதனால் அதிரையில் இருந்து ஏறும் பயனிகள் படிகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலையும் உள்ளது.

எனவே பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதிரைக்கு மீண்டும் இப்பேருந்து சேவை துவங்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறொம்.

Close