அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 41வது ஆலோசனைக் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 41 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/12/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                     : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை          : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

சிறப்புரை              : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை     : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )

தீர்மானங்கள்:

1) இந்தக் கூட்டத்தில் நமதூர் புதிய உறுப்பினர்கள் சிலர் வந்து சிறப்பித்தமைக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டங்களில் நமதூர் எல்லாத் தெருவாசிகளும் புதிய நபர்களும் சிரமத்தை பொருட்படுத்தாது ஆர்வமுடன் வந்து கலந்து நமதூர் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக நடந்து வரும் கூட்டத்தில் பல அறிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்டது

2) இன்ஷா அல்லாஹ் வரும் புதிய ஆண்டு 2017 முதல்  ABM ரியாத் கிளை மேலும் செம்மையாகவும் சிறப்பாகவும் திறம்பட செயல்படுவதற்கு நமதூரை சேர்ந்த அனைவரும் வெளிநாட்டில் வசிக்கக்கூடிய சகோதரர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் அனைவரும் கூடுதல் ஆர்வமும் பங்களிப்பும், பொருளாதார உதவிகள் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு குறையில்லாத முறையில் மேலும் புதிய திட்டங்களுடன் செயல்பட முழு ஒத்துழைப்பும் தருமாறும், வரும் காலங்களில் பைத்துல்மாலின் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பையும், ஆர்வத்தையும் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

3) தவிர்க்க முடியாத காரணத்தினால் மாதாந்திர கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ள முடியாத நமதூர்வாசிகளும் உறுப்பினர்களும் மாதாந்திர சந்தாவை நியமிக்கப்பட்டுள்ள ஏரியாவைஸ் பொறுப்புதாரிகளிடம் அவசியம் தவறாது செலுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்டது

4) பைத்துல்மாலின் மூலம் இன்ஷா அல்லாஹ் வரும் 2017 வருடத்திற்கான பென்ஷன் உதவிக்காக  ஆர்வமுடன் பெயர்களை பதிவு செய்த  பழைய மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு  நன்றி தெரிவிப்பதோடு மேலும் கொடுக்க  எண்ணம் உள்ளவர்கள்  அடுத்த அமர்விலும் தங்களின் பெயர்களை பதிவு செய்து நன்மையை தேடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் JANUARY 2017 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு \ ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ஸாகல்லாஹ் ஹைர்…

Close