மொபைல் மூலம் தவணை முறையில் பணத்தை வசூலிக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு

ஜெட் ஏர்வேஸ், விமான டிக்கெட் கட்டணத்தை செலுத்துவதற்கு, மாத தவணை வசதியையும் வழங்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பால், நாட்டில், ரொக்க பணப்புழக்கம் குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை
அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ், விமான டிக்கெட் கட்டணத்தை, தவணை முறையிலும் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்நிறுவனம், ஆக்சிஸ் – எச்.எஸ்.பி.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., – கோட்டாக் மகிந்திரா ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி, ஜெயராஜ்சண்முகம் கூறியதாவது: இந்தியாவில், இளைய தலைமுறையினர், ‘கிரெடிட் கார்டு’ உள்ளிட்ட, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வாயிலாக, மாததவணைகளை செலுத்தி வருகின்றனர்.

எனவே, அவர்கள், எங்கள் மாத தவணை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பர். எங்கள் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ‘மொபைல் ஆப்’ வாயிலாக, மாத தவணையில் விமான டிக்கெட்டை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Close