ப்ளாஸ்டிக் முட்டை தகவல்! நம்ப வேண்டாமென உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வேண்டுகோள்!

பிளாஸ்டிக் முட்டை குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்நாமக்கலில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு பல நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை உடைத்து ஆய்வு செய்தனர். வேக வைக்கப்பட்ட முட்டைகளையும் அவர்கள் பரிசோதித்தினர். இறுதியில் பிளாஸ்டிக் முட்டை குறித்து பரவிய தகவல் வதந்தி எனத் தெரிய வந்தது.

Close