Adirai pirai
articles

கடலோர முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்ட தொழில்கள்!

தமிழக கடலோர பகுதிகளில் முஸ்லிம்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.புகழ் பெற்ற முஸ்லிம் கிராம,நகரங்கள் கடலோரப் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரந்து காணப்படும் கடலோரப் பகுதிகளில் முஸ்லிம்கள் இல்லாத ஊர்களே இல்லையெனலாம்.பல இடங்களில் மக்கள்தொகையில் பெரும்பான்மையினராகவும் உள்ளனர்.
ஆனால்,இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதைப் போல,இப்பகுதி முஸ்லிம்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரபு நாடுகள் இன்னபிற சிங்கப்பூர், மலேஷியா,அமெரிக்க ,ஐரோப்பிய,ஆஸ்திரேலிய நாடுகளை நம்பியுள்ளனர். பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் பொருளாதார தன்னிறைவு அடைந்து தாயகம் திரும்பிய பிறகு தத்தமது ஊர்களின் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபடலாம்.

மீன்,இறால்,நண்டு,கணவாய்,சிப்பி,சாப்பாட்டு கருவாடு,கோழித்தீவன கருவாடு, கிளிஞ்சல்கள், விசைப்படகு,சிறு படகு,பிளாஸ்டிக் படகுகளை வாங்கி தொழில் செய்தல்,பழுது பார்த்தல்,உப்பு உற்பத்தி,இறால் பண்ணைகள்,ஐஸ் கம்பெனி, கடல் உரம், கடற்பாசி, மீன்பிடி வலை,தளவாடப் பொருட்கள் கடை, இன்னும் இறைவன் கடல் சார்ந்து ஏற்படுத்தியிருக்கும் தொழில்கள் ஏராளம்,ஏராளம்.

உதாரணத்திற்கு திருமுல்லைவாசல்,நாகூர், முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம்,தொண்டி, கீழக்கரை இன்னும் பல ஊர்களின் முஸ்லிம்கள் இத்தொழில்களில் முழுமையாக நுழையவில்லை.

நாகப்பட்டிணம்,தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிலா சீ புட்ஃஸ், டைமண்ட், அமுல்யா சீ புட்ஃஸ் போன்ற நிறுவனங்கள் பல நூறு கோடிகள் இலாபத்தை வருடம்தோறும் பார்க்கின்றன.அதுவும் இந்த கடலோர பகுதிகளில் சரக்குகளை வாங்கிக் கொண்டு! 

செல்வ வளம் கொழிக்கும் இத்தொழில்களில் நாம் களமிறங்க வேண்டும். உங்கள் ஊர்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் கொஞ்சம் சுற்றிப் பாருங்கள்.நீங்கள் வாழும் ஊர்களில்தாம் இவையெல்லாம் நடைபெறுகின்றன. வேறு எங்கோ நடைபெறுவதில்லை. இதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டால் வெற்றி கொடி நாட்டலாம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy